பெத்தாரண சுவாமி தல வரலாறு

கலியுகத்தின் சிவன் மானாமதுரை மாறக்குறிச்சியில் வாகையடி மரத்தில் தவமிருந்தார். 70 வெள்ளம் சேனையை அழைத்துக்கொண்டு பெருமாளும், ஆஞ்சநேயரும் சேர்ந்து சிவானிடம் அரக்கர்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது அதனை அடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு சிவபெருமான் உக்கிர தாண்டவத்தில் கிளம்புறார். அனைவரும் மன்னரிடம் முறையிடுகிறார்கள். இந்த அரக்கர்களை அடக்கி விட்டால் அடக்குபர்வர்களுக்கு எனது குமாரத்திகள் இருவரையும் கன்னிகாதானம் செய்து வைக்கிறேன் என்று சொன்னார். அங்கு சென்றிருந்த பெருமாள் மாற்று உருவம் கொண்டு பெத்தாரணனாக சென்று அரக்கர்களை அடக்கி விட்டார். இதனை அறிந்த மன்னர் தனது இரு மகள்களையும் பெத்தாரணனுக்கு கன்னிகாதானம் செய்து வைத்தார். இந்த இரு குமரத்திகளின் பெயர் தான் மெக்கநாயகி பரமநாயகி என்பதாகும். பெருமாளின் மாரு உருவ பெயர்தான் பெத்தாரணசுவாமியாகும். 70 வெள்ள சேனைகளுடன் அனைவரும் இங்கு வருகிறார்கள்.

இங்கு வரும் போது மதியான நேரம் வந்தவுடன் தியானம் பூஜை செய்ய திட்டமிட்டனர். பூஜைக்கு தண்ணீர் இல்லை, பெத்த பெருமாள் தன் கை வாளை எடுத்து வாளால் கீழே கோடு கிழித்தார். உடனடியாக தண்ணீர் வந்ததால் இந்த இடம் வாள வாய்க்கால் என்ற ஒரு ஆறு அமைத்தது. அவர்கள் வந்தது மதியான நேரம் என்பதாலும் அரங்கு தியானம் பூஜை எல்லாம் இங்கு நடைபெற்றதால் இவ்வூர் மருவி தியானபுரம் என்று அழைக்கப்படுகிறது. வாகையடி மூர்த்தி உத்தண்டராயராக காட்சி அளித்ததால் உத்தண்டராயர் சன்னதியாகவும், பெருமாள் பெத்தாரணனாக காட்சி அளித்ததால் பெத்தாரணசுவாமி சன்னதியாகவும் இருக்கிறது. யார் யார் எப்படி காட்சி அளித்தார்களோ அதான் படியே இங்கு மாற்று உருவமாக காட்சி அளித்து வருகிறார்கள். 70 வெள்ள சேனைகளுக்கு தளபதி வாகையடி மூர்த்தி ஆகவே வாகையடிமூர்த்திக்கு தனிசன்னிதானம் கொண்டு விளங்குகிறார்

அருள்மிகு பெரியநாயகி அம்மன் வரலாறு

வல்லாள மகாராஜா மிகவும் சந்தோஷத்தில் உச்சியில் இருந்தார் உப்பரிகையிலே இருந்தபடி அந்த பக்கம் போவோர் வருவோர்களை நோக்கி பொற்காசுகளை குவியல் குவியலாக வீசினார். அவரது மனம் மிகவும் உற்சாகத்தில் ததும்பி கொண்டிருந்தது. அரண்மனை ஊழியர்கள் அனைவர்க்கும் சம்பளத்தை இருமடங்காக உயர்த்தினார். எல்லாம் சிவனின் பரிபூர்ண அருள்தான் என்பதில் மகாராஜா பூரணமாக நம்பிக்கை கொண்டு இருந்தார்.அத்துணை சந்தோஷத்திற்கு காரணம் அவர் அப்பா ஆக போவதுதான். ராஜாவும் ராணியும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஓர் விபரீதமான ஆசை ஒன்று வந்தது. கேட்டதையெல்லாம் கொடுக்கும் சிவபெருமான் ஆகவே சிவபெருமானிடம் தங்களின் இன்னொரு காரியத்தையும் சாதிக்க ஆசைப்பட்டனர். அது என்ன ஆசை. அவர்கள் ஆசைப்பட்டது இதுதான். இறைவன் அருளால் பிறக்க போதும் தங்கள் குழந்தை ஈரேழு உலகங்கிளையும் வெல்ல வேண்டுமென்ற ஆசை. அதோடு மட்டுமில்லாமல் அந்த குழந்தை ராட்சசன் மாதிரி மிக பலம். வளம் பொருந்தியவனாக மாறி அசுரர்கள், தேவர்கள் அனைவரையும் வென்று வாகை சூட வேண்டும் என்று விரும்பினர்.

அத்தோடு அவன் உடம்பில் ஏத்துனை துளி ரத்தம் சிந்தினாலும் அந்த ஒவ்வொரு இரத்த துளியும் தன் மகனின் இன்னொரு வடிவமாக மாறி வலம் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். பேராசைப்பட்டார்கள். தங்களது இந்த ஆசை நிறைவேற ஒரே வழி சிவபெருமானை துதித்தால் தான் என்பதை உணர்ந்த மகாராஜாவும், மகாராணியும் இறைவனை ஒருசேர வழிபட்டார்கள். எத்தனை பூஜை உண்டோ அத்தனையும் செய்தார்கள் கடைசியில் காட்டுக்கும் சென்று உணவின்றி நீரின்றி திருநீறை துணையாகக்கொண்டு நாள் கணக்காகவும், மாதக்கணக்காகவும், வருடக்கணக்காவும் கடும் தவம் இருந்தனர். ராஜா ராணிக்கு ஒரு மதியான நேரத்தில் கட்சி தந்தார் சிவன். ஈசனிடம் ஒரு வரம் வேண்டுமென கை கூப்பினர். சிவபெருமான் புன்னகைத்தார். தந்தேன் என்றார் பளீரென மறைந்தார் மகாராணி கர்வத்துடன் தன் உப்பிய வயிற்றை தடவிப்பார்த்துக்கொண்டாள். வயிற்றுக்குள் இருந்த அந்த சிசு தன்பெற்றோர்களின் இந்த பேராசையால் தன் உயிர்க்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை புரிந்துகொண்டோ என்னவோ வேகமாக சிணுங்கியது. பார்வதி குறுக்கிட்டாள்.

அடியார்கள் வேண்டினால் உங்களுக்கு தலை கால் புரியாது நடராஜர் தானே நீங்கள் அந்த மன்னன் உங்களிடம் கேட்ட வரத்தின்விளைவு என்ன ஆகும், தேவ உலகத்தில் ஆரம்பித்து அத்தனைபேரையும் வெட்டி வீழ்த்துவான் அவன் மகன். முன்பு ஒரு முறை பத்மாசுரனிடம் வரம் கொடுத்துவிட்டு அவன் உங்கள் தலையிலேயே கையை வைக்க வந்த கதையை மறந்து விட்டீர்களா? அதே மாதிரிதான் இந்த ராஜாவின் மகனும் நடந்துகொள்வான். இரத்ததுளி சிதறி அதிலிருந்து உயிர் வரவேண்டுமென்றால் அவன் ராட்சஷ பிறப்பு என்று உங்களுக்கு புரியவில்லையா? கலகலவென சிரித்தார் சிவபெருமான். பார்வதி மிகுந்த கோபத்துடன் கிளம்பினார் அசுரப்பிறப்பை தடுக்க வேண்டும் என்ற உக்கிரம் அவளிடம் இருந்தது. அதே நேரம் மகாராணிக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்து வழியில் துடித்தால் மகாராணி, மகாராஜா வாசலிலே காத்திருந்தார். மகாராணிக்கு பிரசவம் பார்க்க பாண்டி நாட்டில் இருந்து ஆயிரம் சுக பிரசவம் பார்த்த மருத்துவச்சி வருவதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அவள் வரவில்லையென மகாராஜா துடித்தார். அடுத்த வாரம்தான் குழந்தை பிறக்குமென்று அரண்மனை மருத்துவச்சிகள் சொன்னதை நம்பியது தப்பாகிவிட்டது. மன்னர் மிகுந்த பதட்டத்துடன் இருக்கும்போது நல்ல வேளையாக பார்வதி மருத்துவச்சியின் உருவில் மகாராணியின் அறைக்குள் நுழைந்தார். அறைக்குள் இருந்த பெண்களை வெளியில் இருக்குச் சொல்லி விட்டு கதவை தாழிட்டாள். மருத்துவச்சி மகாராணி வலியுடன் உதவி கரம்நீட்ட மருத்துவச்சி கோபத்துடன் விஸ்வரூபம் எடுத்தாள். வந்துருப்பது தேவி என்று அதிர்ந்த மகாராணியை அப்படியே அலாக்காக தூக்கி தன் மடியில் கிடத்திக்கொண்டாள். குழந்தை உயிருடன் பிறந்தால்தானே ராட்சஷனாகும்.

அதனால் அது பிறப்பதற்கு முன்பே தேவி மகாராணியின் வயிற்றைக் கிழித்தாள். குழந்தையை அதன் ஒரு துளி ரத்தம் கூட கீழே விழுந்துவிடாதபடி எடுத்து இடது கையில் வைத்துக்கொண்டாள். ஏதோ விபரீதம் என்று உணர்ந்து மகாராஜா கதவை உடைத்துக்கொண்டு உள்ள நுழைந்ததும் நடந்த விஷயம் உடன் புரிய தேவியின் பாதங்களில்விழ அவரையும் மிதித்து காலடியில் போட்டுகொண்டாள் தேவி. மகாராஜா உயிர் பிச்சையோடு மன்னிப்பும் கேட்டு கதறி அழ பார்வதி பெரியநாயகியாக தோன்றி மகாராஜாவின் மனைவியையும், குழந்தையையும் உயிர்ப்பித்து தந்தாள். மகாராஜாவும் மகாராணியும் மனம் திருந்தி தன்மகனோடு பல்லாண்டு வாழ்ந்து நல்லாட்சி புரிந்தனர் இறுதியில் சொர்க்கப்பெறும் அடைந்தனர். நல்ல குழந்தை வேண்டுபவர்கள் இந்த பெரியநாயகி அம்மனை தரிசித்தால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மன்னர்கள் காலத்தில் இருந்தே இவ்வாலயத்தில் மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள், பயந்த கோளாறு உள்ளவர்கள் பேய் பிடித்தவர்களை இங்கு கொண்டுவந்து குணப்படுத்துவார்கள். அதுபோல் மகாராணிக்கே ஒருமுறை பேய் பிடிக்க இங்கே அழைத்துவந்தார்கள் அப்போது பூசாரி மகாராணியை சாட்டையால் அடித்து பேயை விரட்ட மன்னன் வெகுண்டான். ஒரு பூசாரி ராணியை அடிப்பதா என்று கோபப்பட்டு கோவில் சாமியாடியை பாதாளச்சிறையில் அடைத்தான். மாறுநாள் பூசாரி அக்னி கப்பரை ஏற்றும் நாள் பூசாரி சிறையில் இருப்பதால் சடங்கு நின்று ஒருக்கு சாமிக்குத்தம் வருமோ என்று ஊர் மக்கள் அஞ்சினார்கள். அதிசயம் நிகழ்ந்தது பாதாளச்சிறையில் இருந்து பூசாரி பெரியநாயகி அம்மன் அருளால் ஆலையத்துக்கு வந்து அக்னி கப்பரை எடுத்தார். மன்னன் நடந்த அதிசயத்தை உணர்ந்து மன்னிப்பு வேண்டினான்.

அருள்மிகு வழியூரான் வரலாறு

ராமபிரான் தன் சேனைகளுடன் இலங்கை நோக்கி சென்ற போது தியானபுரத்தில் ஒரு அசுரன் எதிர்ப்பட்டு சண்டைக்கு வர குழந்தை வடிவில் இருந்த அனுமன் தானே அவனை கவனிக்க போதும் என்ற எதிர்பட்டார். குழந்தை என்பதால் கலகலவென சிரித்த அசுரன் ஆஞ்சநேயரின் வாலுக்கு தீ வைக்க அனுமன் விஸ்வரூபம் எடுத்து அசுரனை ஒழித்து ராம சேனைகளுக்கு வழி விட்டார். வழி விட்ட ஆஞ்சநேயரை வழியூரான் என்ற பெயரில் தியானபுரம் கோவில் வாயிலில் விஸ்வரூபமாக காட்சி தந்தபடியே நிற்கிறார். இவரை பார்த்தால் அனைவருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும்.