சித்திரை மாத திருவிழா 3 தினங்களுக்கு மிகவும் சிறப்பாக விமரிசையாக நடைபெறும் நாடகங்கள் காலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இத்திருவிழா வருடா வருடம் சித்திரை மாத கடைசி திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறும்.
மாத கடைசி திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு காவடிகள் ஊர்வலம் வருதல் பகல் 1.00 மணிக்கு சுப்பிரமணியர்க்கு அபிஷேகம் ஆராதனையும் நடைபெறும். அன்று இரவு 9.00 மணிக்கு மேளகச்சேரி மற்றும் வாணவேடிக்கையுடன் சுவாமிகள் புறப்பாடு நடைபெறும்.
மறுநாள் புதன்கிழமை காலை 6 .00 மணிக்கு அக்னிகப்பரை பாரம்பரிய முறைப்படி நடைபெறும்.