அன்புடையீர் வணக்கம்.
வளம் கொழிக்கும் சோழ நாட்டின் சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட ஊர்களில் முதன்மையானதும் சப்த விடங்கள் தளங்களில் முதன்மை பெற்றதும் ஆன திருவாரூர் மிக அருகிலேயே அமைந்த தியானபுரம் என்னும் திவ்வியம்பதியில் கோவில் கொண்டு விளங்கும் ஸ்ரீ பெத்தாரண சுவாமி தல ஆலய வலராறு புத்தக வடிவிலும் வெளிவந்துள்ளது. கோவிலை நெருங்கியதும் வழக்கம்போல் பெரிய கோபுரம் எல்லாம் இல்லாததால் இது கோயிலா அல்லது பெரிய வீடா என்று கூடத் தோன்றும். ஆதிகாலம் தொட்டு இப்படிதான் இருக்கின்றது. முகப்பில் பெரிய மாறுதல் எதுவும் நாங்கள் செய்யவில்லை, வெளியில்தான் தனியாக காட்டுகிறோம்.
இதை கடவுள் வாழும் வீடு என்று கூட வைத்துக்கொள்ளலாம் என்கிறார் கோவிலுக்கு வரும் பக்தர்கள்.கலியுகம் பிறந்ததும் சிவன் தியானம் செய்த ஊர் இந்த தியானபுரம், பெருமாளும் சிவனும் தேவியும் இருக்கும் திருக்கோவில் இது. இக்கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாவான திரு.P.G. சுப்ரமணியபிள்ளை வும் பின்னர் அவரது சகோதாரர் திரு.P.G.கோவிந்தசாமி பிள்ளை இந்த கடவுள் வீட்டை மிக கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டு வந்தனர்.
ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6.00 மணிக்கு குறிசொல்லுதல் எனும் நவ்வாக்கு நிகழ்ச்சியை அவர் மூலமாக அம்பாள் நிகழ்த்துகிறாள்.கூட்டம் குவிகிறது. பக்தர்கள் எல்லோரும் தங்கள் குறைகளைச் சொல்லி தீர்வு கண்டு மிக சந்தோசமாகச் சொல்கிறார்கள். இந்த அலையத்தில் ராமர் தெய்வரங்கப்பெருமாளாக காட்சி தருகிறார். சீதை ஜானகியாகவும் லஷ்மணர் ராக்கப்பராகவும் இங்கே காட்சி தருகிறார்கள். ஸ்ரீ பெத்தாரணசுவாமி, ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ பரமநாயகி, ஸ்ரீ மெக்கநாயகி என்று தனித்தனி சன்னதிகளும் உள்ளது.
இந்த கோவிலின் மிகவும் முக்கியமான சன்னதி ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சன்னதி , இடது கையிலே ஒரு குழந்தை, மடியில் ஒரு பெண் காலடியில் ஓர் ஆண் என்று கிடக்க உக்கரத்துடன் அனால் புன்னகை மாறா முகத்துடன் தொங்கத் தொங்க தாலி கட்டிக்கொண்டு உடல் முழுக்க மாலை சூடிக்கொண்டு செக்கச்சிவந்த நிறத்தில் பெரியநாயகி காட்சி தரும் கோலம் பார்ப்பவர்களை எல்லாம் மெய் சிலிக்கா வைக்கும்.
பரம்பரை பரம்பரையாக பல குடும்பங்களுக்கு குலதெய்வம் இந்த பெரியநாயகி தாயார்தான். எப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றும் வண்ணம் இந்த பெரியநாயகி தாயார் தோற்றம் முதலில் பார்க்க போதும் நம் கண்களுக்கு கோபாநாயகியாக தெரியும் அம்மன் பார்க்க பார்க்க மிகவும் சாந்த ஸ்வரூபியாக மறுவாள் இந்த அறிய அற்புதத்தின் பின்னே ஒரு மாபெரும் கதை மறைந்து இருக்கிறது இத்தொகுப்பை இங்கு வெளியிட உதவிய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தியானபுரம் அருள்மிகு பெத்தாரணசாமி கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாவான திரு. G. கண்ணன் (எ) சந்திரசேகரன் அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த தலவலராறு எல்லாமே இக்கோவிலின் பெரியவர் மற்றும் சாமியாடியுமான 85 வயதை கடந்த அமரர் திரு.P.G.கோவிந்தசாமி பிள்ளை அவர்கள் வாய்மொழியில் கேட்டு எழுதப்பட்டது. இத்தல வரலாற்றில் ஏதேனும் தவறாக தோன்றினாலோ அல்லது மாறுதல் ஏதேனும் இருந்திலோ கோவில் பரம்பரை தர்மகர்த்தா G. சந்திரசேகரன் (எ) கண்ணன் இடம் தெரிவித்தால் திருத்தி அமைக்க மிக உதவியாக இருக்கும் என்பதினை தெரிவித்து கொள்கிறோம். பெரியநாயகியின் கதையை முதல் பாதிப்பாக வெளியிட்ட குமுதம் பத்திரிகைக்கும் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம். தியானபுரத்தில் உள்ளது போல் ஸ்ரீ பெத்தாரணன் சுவாமி , ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில என்று 96 தத்துவம் 96 மேற்பட்ட கோவில்கள் விளங்குகிறது.இக்கோவில் அனைத்து சமூதயாத்தினருக்கும் குல தெய்வமாக இருந்து வருகிறது.
இக்கோவிலில் சித்திரை, ஆடி, கார்த்திகை, தை மாதங்களில் கடைசி செவ்வாயில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் சுவாமி புறப்பாடும் நடைபெறும். புதன்கிழமை காலை 6மணிக்கு அக்னி கப்பரை நடைபெறும். இதில் சித்திரை மதம் மட்டும் 3 தினங்கள் நாடகம், மேளக்கச்சேரி, காவடி,சுவாமி புறப்பாடு, வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பாட்டுமன்றம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளை கொண்டு சித்திரை திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
கோவிலுடைய முக்கிய முறைகள்
கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு பழக்க,வழக்கப்படி பூஜைகள் செய்யப்படும். கோவிலில் உள்ள 65 கும் மேல் உள்ள சுவாமிகளுக்கும் நிவேதனம் தனித்தனியாக வைத்து ஒவ்வொரு சுவாமிக்கும் பூஜை செய்யப்படும். ஒரு சுவாமிக்கு வைத்த நிவேதனத்தை மற்ற சுவாமிக்கு வைக்கும் பழக்கம் இந்த அக்கோவிலில் கிடையாது. ஆதியில் இந்த கோவிலில் பெரியோர்கள் பூஜைகள் எப்படி நடததப்பட்டதோ அப்படியே இன்றும் மாறாமல் நடைபெற்று வருகின்றது.
கோவில் சாமியாடியை தேர்ந்து எடுக்கும் முறை
கோவிலில் சாமியாடியாக இருப்பவர் சிவபதம் அடைந்த பிறகு அவரது உடல் ஆன்மிகவாதிகளின் பார்வைக்காக வெளி ப்ரகாரத்தில் வைக்கப்படுகிறது. பிறகு இந்த உடல் கோவிலின் அருகாமையில் உள்ள ஐயா திடலில் தகனம் செய்யப்படும். முன்றாம் நாளன்று அவரின் அஸ்தியை கொண்டு வேளாளரிடம் கொடுத்து சாமியாடியை போலவே ஒரு உருவம் செய்து 16 ஆம் நாள் உத்திரக்கிரியை நடைபெற்று புண்ணியதானங்கள் செய்யப்பட்டு அன்று நண்பகல் மணி 12.00 க்கு (உச்சிக்காலத்தில்) கண்திறக்கப்பட்டு திருவருள் வரவழைக்கப்படும். அப்பொழுது பூசாரி வகையறா அனைவரும் உருவத்தின் எதிரில் நிறுத்தப்படுவார்கள்.
விருத்தங்கள் வேதங்கள் பஞ்ச வாத்தியங்கள் அனைத்தும் முழுங்க அங்கு உள்ள சுவாமி வகையறாவில் யாருக்கேனும் ஒருவர்க்கு சுவாமி வரும். அவ்வாறு யாருக்கு வருகிறதோ அவரே அன்று முதல் கோவிலின் சாமியாடியாக தேர்ந்து எடுக்கபடுவார்.இவ்வாறே ஆதிகாலம் முதல் சாமியாடி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சாமியாடியாக இருப்பவர் காலனி அணிய கூடாது. மேல்ச்சட்டை அணிய கூடாது. தலைச்சுமை தூக்க கூடாது. சுபகாரியங்கள் அனைத்திற்கும் செல்லலாம். அசுப காரியங்கள் எதற்கும் செல்லகூட்ட்டது. ஏன் தனது மனைவி மக்கள் மற்றும் உறவினர்கள் யார் இறந்தாலும் பிரேதத்தை கண்ணால் பார்க்க கூடாது.இவையனைத்தும் சாமியாடியாக இருப்பவர் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் வழிமுறையாகும். இதற்கு முன் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் சன்னதமாடியாக இருந்த P.G. சுப்ரமணியபிள்ளை பின்னர் சன்னதமாடியாக இருந்த P.G. கோவிந்தசாமி பிள்ளை அவர்களும் அவ்வாறே தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான்.
இந்த முறைப்படியே சன்னதமடியை தேர்ந்து எடுக்கப்படுவார். அவர்கள் இறைவனடி சேர்ந்த பிறகு அவர்களது குல வழக்கப்படி அடுத்த சன்னதமாடியாக தேர்ந்துதெடுக்கப் பட்டவர்தான் P.G. கோவிந்தசாமி பிள்ளை இன் மூத்த மகன் திரு. G. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை. அவரது இரண்டாவது மகன் திரு. G. சந்திரசேகரன் (எ) கண்ணன் பிள்ளை அவர்கள் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்.
கோவிலில் பூஜை முறைகள்