Welcome to

தியானபுரம் திருக்கோவில்

Get in touch
The Power of Beliefs

அருள்மிகு பெத்தாரணசாமி, பெரியநாயகி அம்மன்

The Power of Beliefs

அருள்மிகு வழியூர் பெருமாள், அருள்மிகு உத்தண்டராயர்

அருள்மிகு பெத்தாரணசாமி, அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் வரலாறு

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் தியானபுரம் அருள்மிகு பெத்தாரணசாமி அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோவிலாகும். இத்திருக்கோவிலுக்கு அனைத்து இனத்தவர்களுக்கும் குலதெய்வமாக விளங்குகிறது.

குலதெய்வமாக வழிபடுவர்கள் நம் நாட்டின் மட்டுமல்லாது மலேசிய, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் உள்ளனர். இத்திருக்கோவிலில் வினாயகர், சிவன், சுப்பிரமணியர், தெய்வரங்கப்பெருமாள், ஆஞ்சநேயர், துர்கையம்மன், நவகிரகங்கள், சப்தகன்னிகள், அய்யனார், காமாட்சியம்மன், ராகவப்பெருமாள், உத்தண்டராயர், அக்னி முனீஸ்வரர், தூண்டில்காரன், மதுரைவீரன், பத்ரகாளி, வாகையடிமூர்த்தி, மற்றும் பல சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு சித்திரை, ஆடி, கார்த்திகை, தை மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும்.

சித்திரை திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குத்துவிளக்குபூஜை, லட்ச்சாரனை, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இத்திருக்கோவிலுக்கு பரம்பரை அறங்காவலராக இருந்து வந்த P.G. சுப்பிரமணியபிள்ளை அவர்களுக்கு பிறகு அவரது சகோதரர் P.G. கோவிந்தசாமி பிள்ளை மகன் G. சந்திரசேகரன் (கண்ணன்) என்பவர் பரம்பரை அறங்காவலராக சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார்

கோவில் அமைந்துள்ள இடம்

இத்திருக்கோவில் திருவாரூர்க்கு புதிய பேருந்து நிலையத்திற்கு தென்புரம் 2 கி.மீ. தொலைவிலும் ரயில் நிலையத்திற்கு மேற்க்கே 2 கி.மீ. தொலைவிலும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவிலும் விளமலில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

கோவில் நிர்வாகம்

ஸ்ரீ பெத்தராண சுவாமி திருக்கோவிலுக்கு பரம்பரை அறங்காவலராக இருந்து வந்த P.G. சுப்ரமணியபிள்ளை காலமாகி விட்ட நிலையில் மேற்படி திருக்கோவிலுக்கு சட்டப்பிரிவு 54(1)ன் படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செ.மு.ப.மு.எண் 11194/2009/E2 நாள் 27.07.2011ன் படி G. சந்திரசேகரன் (கண்ணன்) என்பவர் நிர்வாகத்தை நடத்தவும் சொத்துக்களை பாதுகாக்கவும் சட்டப்படி கடமைப்பட்டவர் ஆவார்.

திருப்பணிகள் பற்றிய விவரம்

பழைய கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய இருக்கிறார்கள். இத்திருப்பணி வேலை சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் செய்ய இருப்பதால் இத்திருப்பணிக்கு பக்தர்கள் அனைவரும் இயன்ற அளவு பொருளாகவோ, பணமாகவோ கொடுத்து திருப்பணி விரைந்து முடிக்கவும் மற்றும் கும்பாபிஷேகத்தை பூர்த்தி செய்து கொடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோவில் பூஜை சம்பந்தமாக விவரம் பெறவும் மற்றும் திருக்கோவில் திருப்பணிக்கு நன்கொடை கொடுக்க விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட முகவரியை அனுகவும்.

திருக்கோவில் திருப்பணிக்கு நன்கொடை தரும் அன்பர்கள் ரசீது கேட்டு பெற்றுக்கொள்ளவும். திருக்கோவில் சம்மந்தமாக அனைத்திற்கும் அணுக வேண்டிய முகவரி

G. கண்ணன் (எ) சந்திரசேகரன் பிள்ளை (பரம்பரை அறங்காவலர்),
ஸ்ரீ பெத்தரணசுவாமி கோவில்,
தியானபுரம், கலெக்ட்ரேட் அஞ்சல்,
திருவாரூர் - 610004
போன் : 04366 -226794
கைப்பேசி: 9486533128

கோவிலில் பூஜை முறைகள்

  • தினந்தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பின்பு மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் நேரம் ஆகும்.
  • தினமும் எல்ல சுவாமிகளுக்கும் முறைப்படி அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் இல்லாத சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்படும்.
  • தினமும் நடை திறந்திருக்கும் நேரங்களில் பூஜை மற்றும் அர்ச்சனை செய்யப்படும்.
  • காலை 9 மணியளவில் எல்ல சுவாமிகளுக்கும் முறைப்படி நெய்வேத்தியங்கள் செய்யப்படும். அதை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொங்கல் செய்து கொடுப்பதை படையல் போட்டு பூஜை செய்து கொடுக்கப்படும்.
  • வழியூரான் சுவாமிக்கு வடை மாலை சாற்றும் வழக்கம் உள்ளதால் வடைமாலை சாற்ற விரும்பும் பக்தர்கள் முன் கூட்டியே பரம்பரை அறங்காவலரிடம் தெரிவித்து ஏற்பாடு செய்துகொள்ளவும்.
  • உடல்நலம் சரில்லாதவர்கள், பயந்தக்கோளாறு உள்ளவர்கள் அம்பாள் மடியில் வைத்து பூஜை செய்த முடி கயிறு கையில் கட்டி கொள்பவர்கள் குணமடைவார்கள்.
  • குடும்பத்தில் ஏற்படும் (திருமணத்தடை, கிரக கோளாறுகள், தோஷங்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்) அம்பாளிடம் மனமுருகி உளமார வேண்டிக்கொண்டு கருணை மனு எழுதி அம்பாளிடம் செலுத்துவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தியாகும்.

திருக்கோவில் சம்மந்தமாக அனைத்திற்கும் அணுக வேண்டிய முகவரி

9486533128 (கோவில் நிர்வாகம்)

வழியடி நிர்வாகிகள்

அணுக வேண்டிய முகவரி

G. கண்ணன் (எ) சந்திரசேகரன் பிள்ளை (பரம்பரை அறங்காவலர்),
ஸ்ரீ பெத்தரணசுவாமி கோவில்,
தியானபுரம், கலெக்ட்ரேட் அஞ்சல்,
திருவாரூர் - 610004
போன் : 04366 -226794
கைப்பேசி: 9486533128
Email : chandhu1268@gmail.com

மேலும் அணுக வேண்டிய முகவரி

புகைபடம்